May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா

1 min read

6,988 affected for corona one day in Tamil nadu

25-7-2020

தமிழகத்தில் ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் இன்று (சனிக்கிழமை ) ஒரேநாளில் 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 6926, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 62 பேர் உட்பட 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 64,315 மாதிரிகளும், இதுவரை 22,87,334 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 61,729 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

89 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அரசு ஆஸ்பத்திரியில் 66 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 23 பேரும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதுதவிர வேறுபாதிப்பு இல்லாத 6 பேர் கொரோனா தொற்றால் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் உயிரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இன்று (சனிக்கிழமை ) மட்டும் 7,758 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,055லிருந்து 1,58,813 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 52,273 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மேலும் 1,329 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 1989 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக…

இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

அரியலூர் 4
செங்கல்பட்டு 449
சென்னை 1329
கோயம்புத்தூர் 270
கடலூர் 89
தருமபுரி 30
திண்டுக்கல் 100
ஈரோடு 22
கள்ளக்குறிச்சி 104
காஞ்சிபுரம் 442
கன்னியாகுமரி 269
கரூர் 27
கிருஷ்ணகிரி 31
மதுரை 301
நாகப்பட்டினம் 10
நாமக்கல் 51
நீலகிரி 40
பெரம்பலூர் 25
புதுக்கோட்டை 110
ராமநாதபுரம் 86
ராணிப்பேட்டை 244
சேலம் 112
சிவகங்கை 84
தென்காசி 99
தஞ்சாவூர் 162
தேனி 235
திருப்பத்தூர் 86
திருவள்ளூர் 385
திருவண்ணாமலை 152
திருவாரூர் 100
தூத்துக்குடி 317
திருநெல்வேலி 212
திருப்பூர் 51
திருச்சி 199
வேலூர் 212
விழுப்புரம் 157
விருதுநகர் 376

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 11
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 5
ரெயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0

மொத்தம் 6,988

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.