May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நர்சுகள் 16 பேருக்கு கொரோனா

1 min read
Corona for 16 nurses at Nellai Government Medical College Hospital

26-7-2020

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி நர்சுகள்16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

நர்சுகளுக்கு கொரோனா

தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான் அதிக அளவில் கொரோனா தொற்று இருந்தது. ஆனால் இப்போது மற்ற மாவட்டங்களிலும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 16 நர்சுகளுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த நர்சுகள் கடந்த வாரம் கொரோனா வார்டில் பணியாற்றினார்கள். பின்னர் அவர்கள் ஒரு வாரம் தனியார் விடுதியில் ஓய்வில் இருந்தவர்கள். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனயைில் அவர்களுக்கு கொரோனா இருப்து கண்டறியப்பட்டது.
நெல்லையில் ஏற்கனவே 3 நர்சுகள், 3 நர்சு உதவியாளர்கள் என 6 பேருக்கு நோய்த்தொற்று இருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 16 நர்சுகள் கொரோனா உறுதியாகி இருக்கிறது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

190 பேர்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள், N95 முக கவசம், வார்டில் அணியும் செருப்பு போன்றவை செவிலியர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த மாவட்டத்தில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 190 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் நெல்லை மாநகர பகுதியில் 85 பேருக்கும், ராதாபுரத்தில் 37 பேருக்கும், பாளையங்கோட்டை புறநகரில் 21 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களையும் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,785 ஆனது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,790 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மதுரை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 202 பேர் இறந்துள்ளனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 233 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,789 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,940 பேர் குணமடைந்துள்ளனர். 1,803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 204 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 5,156 ஆனது. 42 பேர் இறந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 460 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 6,033 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு

காஞ்சிபுரம் மாவடத்தில் மேலும் 347 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 7,143 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 475 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு 11,870 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் அதிகபட்சமாக மீஞ்சூரில் 92, பூந்தமல்லியில் 70, பொன்னேரி, ஆர்கே பேட்டையில் தலா 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை, 12,272 ஆக அதிகரித்துள்ளது

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மட்டும் 130 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 700 ஆனது

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 176 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 5,085 ஆக உயர்ந்தது. 3,212 பேர் குணமடைந்தனர். 48 பேர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.