முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மலரவன் திடீர் மரணம்
1 min read
Former ADMK MLA Malaravan’s sudden death
17.5.2024
கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் மலரவன்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் தீபா கட்சியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
கடந்த சில மாதங்களாக மலரவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அரசியலில் இருந்து விலகி கோவை கணபதி பாரதிநகரில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை மலரவன் மரணம் அடைந்தார்.
மலரவனுக்கு இந்த பெயரை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தான் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலரவன் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் நெருங்கிய பழக்கத்தில் இருந்தவர்.