இந்தியாவில் 49,931 பேருக்கு கொரோனா ; 708 பேர் சாவு
1 min read
All over Indai 49.931 person affected for corona and death 708 one day
27-7-2020
இந்தியாவில் ஒரே நாளில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 708 பேர் இறந்துள்ளனர்.
49,931 பேருக்கு கொரோனா
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இந்தியாவில் கொரோனா பரவல் பற்றிய விவரத்தை தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம் 14,35,453 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
708 பேர் சாவு
நேற்று ஒரே நாளில் 708 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர் . இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,771 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 9,17,568 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்தரிகளில் 4,85,114 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியரில் அதிகபட்டசமாக மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 3.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 375799 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 213238 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13656 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 213723 பேருக்கும், டெல்லியில் 130606 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் வாரியாக…
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் 3,75, 799 ( 13,656)
தமிழ்நாடு 2,13,723 ( 3,404)
டெல்லி 1,30,606 ( 3,827)
கர்நாடகம் 96,141 (1,878)
குஜராத் 55,822 ( 2326)
உத்தரபிரதேசம் 66,988 (1,426)
தெலுங்கானா 54,059 (455)
ஆந்திரா 96,298 (1,041)
மேற்குவங்காளம் 58,718 (1,326)
ராஜஸ்தான் 35.909 (621)
அரியானா 31,332 (392)
மத்திய பிரதேசம் 27,800 (811)
பீகார் 39,176 (244)
அசாம் 32,228 (79)
ஒடிசா 25,389 (140)
காஷ்மீர் 17,920 ( 312)
பஞ்சாப் 13,218 ( 306)
கேரளா 19,025 (51)
சதீஷ்கர் 7,450 (43)
உத்ரகாண்ட் 6,104 (63)
ஜார்க்கண்ட் 8,275 (85)
கோவா 4,861 (35)
திரிபுரா 3,900 (13)
புதுச்சேரி 2,7865 (40)