May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி ; தமிழுக்கு ஊக்கம்; மும்மொழித் திட்டம் – புதிய கல்விக் கொள்கையில் தகவல்

1 min read


Mother tongue education up to 5th standard; Encouragement for Tamil; Trilingual program – information on the new education policy

29-7-2020

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எம்.பில். படிப்புகள் நிறுத்தப்படுவதுடன், பொறியியல் போன்ற படிப்புகளில் விடுப்பு எடுத்து கொண்டு படிக்கலாம் எனவும் புதிய கல்விக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரிகள் ரமேஷ் பொக்ரியால், பிரகாஷ் ஜாவ்டேகர் மற்றும் அதிகாரிகள் நிருபர்களை சந்தித்தனர். மத்திய மந்திரி பிரகாஷ் ஜாவேத்கர் கூறும்போது, ” 21ம் நூற்றாண்டிற்கான புதிய கல்வி கொள்கைக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளாக கல்வி கொள்கையில் எந்த மாற்றமும செய்யவில்லை. கல்வித்துறையில் முக்கியமான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.” என்றார்.

பின்னர் புதிய கல்விக் கொள்கை பற்றி மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே கூறியதாவது:-

இணைய தளம் மூலம் புதிய பாடத்திட்டம்

கல்வி கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. எனவே பன்மொழி கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது.

அதன்படி 15 ஆண்டுகளில் இணைப்பு கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.
இந்திய மொழிகளுக்கான இலக்கியம், அறிவியல் பூர்வ வார்த்தைகளை கண்டறிய கவனம் செலுத்தப்படும்.
மாநில மொழிகளுக்கு இணையாக புதிய கல்வி கொள்கையில் பாட திட்டங்கள் இருக்கும்

மாநில மொழிகளில் கல்வி கற்க இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பாட திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

எளிதான வழிமுறை

புதிய கல்வி கொள்கை மூலம் 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும். குழந்தைகளுக்கு எளிதான வழிமுறைகள் மூலம் ஆரம்ப கல்வி கற்பிக்கப்படும்.

புத்தகம் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும்.

மாற்றுதிறனாளிகள் எளிதாக கல்வி கற்க புதிய மென்பொருட்கள் மூலம் வசதிகள் ஏற்படுத்தப்படும்

மாற்று திறனாளி குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய பாட திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அமலில் இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு முறையில் மாணவர்கள் ரேங்க் கார்டு தயார் செய்யப்படும்.

தாய் மொழி

5ம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி கட்டாயம். 8 ம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் உள்ளூர் கைவினை தொழில்களை கற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் கல்வி கற்க வைப்பது ஆசிரியர்களின் பொறுப்பு.
குழந்தைககளுக்கு எளிதான வழிமுறைகள் மூலம் ஆரம்ப கல்வி கற்பிக்கப்படும்.
புதிய கல்வி கொள்கையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரே கல்வி முறை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி முறை ஒரே மாதிரியாக இருக்கும்.

தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு தர நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த இந்த புதிய கல்விக்கொள்கை பயன்படும்.

முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கும்.

2ம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறையில் இருக்கும்.

தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும்.

5 + 3 + 3 + 4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் கற்பிக்கப்படும்

விடுப்பு

பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரலாம்.

உயர்கல்வியில் எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படுகிறது.

15 ஆண்டுகளில் இணைப்பு கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.

உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குப்படுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்

6 சதவீதம்

நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை

கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் அமைக்கப்படும்.

உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் 2035 க்குள் 50 சதவீதம் மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை

நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும்.

கல்விக் கட்டணங்கள் குறித்து புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விரிவாக்கப்பட்டு சமூக அறிவியல் கள ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

கல்வித் துறைக்கான புதிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு தரும்.

கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்

தமிழுக்கு ஊக்கம்

தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்.

பள்ளிப்படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தொழில்திறன் இருக்கும்.

மும்மொழிக் கொள்கை

புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்படும்.

என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் விருப்ப மொழியாக இருக்கும்.

பள்ளிகள் மற்றும் உயர்கல்வியில் விருப்ப மொழியாக சமஸ்கிருதம் சேர்க்கப்படும். சமஸ்கிருதம் மட்டுமல்லாமல், இதர தொன்மையான மொழிகளும் வழங்கப்படும்.

நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக இருக்கும்.

கல்விக் கட்டணங்கள் குறித்து கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கும் கட்டணங்கள் வெளிப்படையாகவும், முழுமையாகவும் வெளியிடப்படும்.

கல்விக்கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.