தென்காசி பகுதியில் குடிநீர் பிரச்சனை- ஆட்சியர் அவசர ஆலோசனை
1 min read
Drinking water problem in Tenkasi area – Collector’s urgent advice
1.5.2024
தென்காசி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வழங்கல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வழங்கல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான செயற்பொறியாளர், நகராட்சி ஆணையாளர்கள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்). செயல் அலுவலர்கள், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் சீராக குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவுரை வழங்கினார்.