6, 7-ந் தேதிகளில் அமேசான் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை
1 min read
Sale of products at Amazon discounted prices on the 6th and 7th
3-8-2020
வருகிற 6, 7-ந் தேதிகளில் அமேசான் தள்ளுபடிவிலையில் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது.
அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக அதிக தள்ளுபடியுடன் பல பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறது. வருகிற6 மற்றும் 7-ந் தேதிகளில் ‛அமேசான் பிரைம் டே சேல்’ என்ற விற்பனை திருவிழாவை தொடங்குகிறது.
இதில் ஐபோன் 11, சாம்சங் கேலக்ஸி எஸ்-10 சீரிஸ் மற்றும் பிற பிரபலமான ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சில அற்புதமான தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது.
அமேசான் நிறுவனம் விற்பனை செய்ய இருக்கும் பொருட்களை பற்றிய விவரம் வருமாறு :-
சாம்சங் எம்-31-எஸ்
ஜூலை கடைசி வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் எம்-31-எஸ், பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் மலிவு விலையை கொண்டுள்ளது. வருகிற 6-ந் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய போன் ரூ.19,499-க்கும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய போன் ரூ.21,499-க்கும் கிடைக்கும்.
6.5 இன்ச் முழு எச்டி + சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளேவுடன் கூடிய இதில், முதன்மை கேமரா 64 மெகா பிக்சலும் (எம்பி), பின்பக்க கேமராக்கள் 5 எம்பி டெப்த் சென்சார், 12 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 10 உடனான இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் அதன் 6,000 எம்ஏஎச் பேட்டரி ஆகும். மேலும் 25W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.
ரெட்மி 9 பிரைம்
ரெட்மி நிறுவனம் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரைம் தொடரில் ரெட்மி 9 பிரைம் என்னும் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. பிரைம் தொடரில் இது மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆகும். ரெட்மி 9 பிரைம் போன், ரெட்மி நோட் 9 அல்லது ரெட்மி 9 போன்களை ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான தகவலின்படி இது முழு எச்டி + டிஸ்ப்ளே 2340x1080P ரெஸல்யூசன் கொண்டதாக இருக்கும் எனவும், ஸ்பிளாஸ்-ப்ரூப் (splash-proof), அதிவேக சார்ஜிங் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் கொண்டிருக்கிறது.
ஹானர் 9ஏ
ஜூலை 31 அன்று வெளியிடப்பட்ட ஹானர் 9ஏ ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாகும். இது அமேசான் விற்பனை நாட்களில் ரூ.8,999-க்கு கிடைக்கும். 6.3 இன்ச் எச்டி + எல்சிடி பேனலைக் கொண்டுள்ளது. 5,000 எம்ஏஎச் பேட்டரியும், பின்புறம் கைரேகை சென்சாரும் கொண்டுள்ளது. மேலும் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தலாம். பின்புறத்தில், 13 எம்.பி முதன்மை சென்சார், 5 எம்.பி அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 2 எம்.பி டெப்த் சென்சார் கொண்ட மூன்று கேமராவையும், முன்பக்கத்தில், 8 எம்.பி கேமராவையும் கொண்டுள்ளது.
சோனி ஸ்மார்ட் எல்.இ.டி டி.வி
சோனி, சிறந்த பிரீமியம் டிவி பிராண்டுகளில் ஒன்றாகும். எக்ஸ்-74-எச் தொடரின் கீழ், 43 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு திரை அளவுகளில் கிடைக்கின்றன. இதில் உள்ள புதிய எக்ஸ்-1 4-கே பிராசஸர் உடன் ஆச்சரியமூட்டும் வகையிலான பட தெளிவு மற்றும் வண்ணங்களை மேம்படுத்தும். இது ஆன்ட்ராய்டு 9-ல் இயங்குகிறது. பாஸ்-ரெப்ளெக்ஸ் ஸ்பீக்கர்களுடன் மேம்பட்ட ஒலியை உறுதிப்படுத்துகிறது. புதிய பிராவியா டிவிகளின் விலை ரூ.49,999-ல் இருந்து தொடங்குகிறது.
ஹுவாமி அமேஸ்பிட் பவர்பட்ஸ்
இந்தியாவில் தொடர்ச்சியான ஸ்மார்ட்வாட்சுகள் மற்றும் பிட்னெஸ் டிராக்கர்களை அறிமுகப்படுத்திய பின்னர், ஹுவாமி அமேஸ்பிட், தனது முதல் டி.டபிள்யு.எஸ் இயர்பட்ஸை அறிமுகப்படுத்த உள்ளது. ரூ.5,999 விலையில், அமேஸ்பிட், பவர்பட்ஸ் பிரிவில் ஒரு தனித்துவமான அம்சத்தை வழங்குகிறது. காதுகளில் உள்ள பிபிஜி இதய துடிப்பு சென்சார் மூலம் உடற்பயிற்சியின் போது உங்கள் இதயத் துடிப்பை பவர்பட்ஸ் கண்காணிக்க முடியும். உடற்பயிற்சியின் போது காதுகுழாயில் இருந்து இயர்பட்ஸ் விழுவதைத் தடுக்க ஒரு ஜோடி காந்த கொக்கியும் உள்ளது.
இது போன்ற எண்ணற்ற பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பு தள்ளுபடியுடன் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரைம் டே சேலில் வழங்க இருக்கிறது.