June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

சீன எல்லையான லடாக் வடக்கில் இந்திய படைகள் குவிப்பு

1 min read
Indian forces concentrated north of Ladakh on the Chinese border

3-8-2020

சீன எல்லை அருகே லடாக் வடக்குப் பகுதியில் இந்தியா தனது படைகளை குவித்து எல்லையை வலுப்படுத்தி வருகிறது.

சீனா

அண்டை நாடான சீனா அவ்வப்போது இந்தியாவை சீண்டி வருகிது. நமது எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்க துடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனா அத்துமீறி நுழைந்தது. இதனால் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டனர். இதில், 20 இந்திய வீரர்கள் பலியாயினர். சீனா தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இரு தரப்பிலும் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாட்டு ராணுவமும், தங்கள் படைகளை, எல்லையில் இருந்து, திரும்ப பெற்று வருகின்றன.

குவிப்பு

இந்திய எல்லையில், நம் நாட்டு படைகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சீன படைகள் போருக்கு தயாராகி வருவதற்கான அறிகுறி தெரிவதாக கூறப்படுகிறது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கவும், நம் படைகள் தயாராக இருக்க வேண்டியது இருக்கிறது.
இந்த நிலையில் வடக்கு லடாக் எல்லையில் இந்தியா ஏராளமான பீரங்கிகளையும், ராணுவ தளவாடங்களுடன் கூடியவீரர்களையும் குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *