June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா; டெல்லி 5-வது இடம்

1 min read

In India 52.050 person affected for corona and death 803 oneday; Delhi goes 5-th place

4-8-2020

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 803 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

52,050 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோன நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் நேற்று(திங்கட் கிழமை)) ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால்,கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 18,55,746 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 803 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும்  38,938 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 44,307 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை மொத்தம் 12,30,510 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,86,298 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) 6,61,892 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதனால், மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 2,08,64,750 ஆக அதிகரித்தது.

மாநிலம் வாரியாக…

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-

மராட்டியம் 4,50,196 ( 15,842)

தமிழ்நாடு 2,63,222 ( 4,241)

டெல்லி 1,38,482 ( 2,230)

ஆந்திரா 1.66.586 (1,537)

கர்நாடகம் 1,39,571 (2,594)

குஜராத் 64,585 ( 2,508)

உத்தரபிரதேசம் 97,3624 (1,778)

தெலுங்கானா 68,946(563)

மேற்குவங்காளம் 78,232 (1,731)

ராஜஸ்தான் 44.975 (715)

அரியானா 37,173 (440)

மத்திய பிரதேசம் 34,285 (900)

பீகார் 59,328 (330)

அசாம் 45,275 (109)

ஒடிசா 36,297 (207)

காஷ்மீர் 22,006 ( 407)

பஞ்சாப் 18,527 ( 442)

கேரளா 26,873 (84)

சதிஷ்கர் 9,779 (61)

உத்ரகாண்ட் 7,800 (90)

ஜார்க்கண்ட் 13,478 (125)

கோவா 6,816 (56)

 திரிபுரா 5,505 (28)

புதுச்சேரி 3,982 (56)

டெல்லிக்கு 5–வது இடம்

கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலத்திற்கு அடுத்த நிலையில் டெல்லி இருந்தது. பின்னர் 2-வது இடத்தை தமிழகம் பிடித்தது. இப்போது 3-வது இடத்தில்  இந்த டெல்லியை ஆந்திராவும் பெங்களூருவும் முந்தியது. இதனால் டெல்லி 5 –வது இடத்தில் இருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.