கொரோனாவுக்காக பள்ளிகள் மூடப்பட்டதால் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்
1 min read
7 thousand students pregnant due to closure of schools for corona
4-8-2020
கொரோனா ஊரடங்களால் பள்ளிக்கூடங்கள் கடந்த 5 மாதங்களான மூடப்பட்டு உள்ளன. இதனால் கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மாலவியில் 7 ஆயிரம் மாணவிகள் கா்ப்பமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோானா பாதிப்பு
உலகமெல்லாம் பரவி வரும் கொரோனா எண்ணற்ற பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிர்பலி, பொருளாதார இழப்புதான் பெரும் பாதிப்பு என்று கருதுவோம். ஆனால் கொரோனா ஊரடங்களால் மாணவர்கள் 7 ஆயிரம் பேர் கர்ப்பம் அடைந்துள்ள அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
கிழக்கு ஆப்பரிக்க நாடான மாலவியிலும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
7 ஆயிரம் மாணவிகள்
ஊரடங்கு நேரத்தில் அந்நாட்டு மாணவிகள் 7 ஆயிரம் பேர் கர்ப்பமாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த மாணவர்கள் அனைவரும் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் வேதனை.
இது குறித்து அந்நாட்டின் இளைஞர் சுகாதார சேவை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் மாலிபா கூறும்போது, “கடந்த ஐந்து மாத காலமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நேரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்த சூழலில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். பாலோம்பே நகரில் மட்டும் 1000 மாணவிகளும், மிசம்பா மற்றும் நசான்ஜே நகரில் 724 மாணவிகளும் கர்ப்பம் அடைந்துள்ளனர்” என்றார்.
பாலியல் வன்முறைகள்
அந்நாட்டின் கல்வித் துறை இயக்குனர் பெனிடிக்டோ கோன்டோவே கூறும்போது,” கொரோனா ஊரடங்கு காலத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன” என்றார்.
கென்யா
கொரோனா ஊரடங்கின் போது கடந்த 3 மாத காலத்தில் மட்டும் கென்யாவில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும் இது சராசரி எண்ணிக்கையை விட 40 சதவீதம் அதிகம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.