June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அந்த நடிகருடன் படுக்கையை பகிர்ந்தால் தான் படவாய்ப்பு.. ஷாக் தரும் சீனியர் நாயகி

1 min read

6.8.2020

The cinema opportunity is only if you share a bed with that actor .. the senior heroine who gives a shock

தமிழ் சினிமாவில் கமலஹாசன் என்ற மிகப் பெரும் ஆளுமை இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அவருடைய படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் ஆகிய அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.

அந்த வகையில் கமலஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த ஆளவந்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பாலிவுட் வரவாக வந்து இறங்கியவர் தான் ரவீனா டாண்டன்.

ரவீனா டாண்டன் பட வாய்ப்புக்காக நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இளம் வயதில் இதை கூறாமல் 45 வயது ஆனபிறகு இதைக் கூறி என்ன பயன் என்கிறார்கள் ரசிகர்கள்.

‘‘90 காலகட்டங்களில் பாலிவுட் சினிமாவில் ஒரு பட வாய்ப்பை பெற வேண்டும் என்றால் அப்போது முன்னணி நடிகராக இருந்த ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் கலாச்சாரமாக இருந்தது. அவருடன் மட்டுமில்லாமல் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு நடிகருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் தான் அந்த மாதிரி எந்த ஒரு விஷயத்திலும் சிக்கவில்லை’’ என தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக தொடர்ந்து பல முன்னணி நடிகைகள் குறிப்பாக பாலிவுட் சினிமாக்களில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருப்பதை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில்கூட பிரபல நடிகையான அதிதி ராவ் இதைப்பற்றி தெரிவித்திருந்தார். கோலிவுட் சினிமாவிலும் இந்த பழக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் தமிழில் அவ்வளவு சீக்கிரம் இந்த மாதிரி விஷயம் வெளி வராது என்கிறது கோலிவுட்.

தற்போது ரவீனா டாண்டன் கன்னட சினிமாவில் பேன் இந்தியா படமாக உருவாகி வரும் கேஜிஎப் சாப்டர் 2 படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.