June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா;110 பேர் சாவு

1 min read
Corona for 5,684 and death 110 in Tamil Nadu today

6-8-2020

தமிழகத்தில் இன்று மட்டும் 5,684 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று மட்டுமு் 110 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

5,684 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் பரவும் கொரோனா பற்றிய தகவலை இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) மட்டும் 5,684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 1,091 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,06,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர இன்று செங்கல்பட்டில் 408 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 336 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும், தேனியில் 297 பேருக்கும், ராணிப்பேட்டையில் 270 பேருக்கும், திருநெல்வேலியில் 250 பேருக்கும், தூத்துக்குடியில் 239 பேருக்கும், கன்னியாகுமரியில் 222 பேருக்கும், கடலூரில் 214 பேருக்கும் தென்காசியில் 64 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

டிஸ்சார்ஜ்

கொரோனா பாதித்தவர்களில் இன்று 6,272 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 2,21,087 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் சென்னையில் மட்டும்1,162 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 92,128 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 447 பேரும், திருவள்ளூரில் 394 பேரும், மதுரையில் 330 பேரும், காஞ்சிபுரத்தில் 309 பேரும், திருவண்ணாமலையில் 301 பேரும், தேனியில் 276 பேரும், திருச்சியில் 248 பேரும், தூத்துக்குடியில் 246 பேரும், கன்னியாகுமரியில் 242 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்கள்.

110 பேர் சாவு

இன்று 110 பேர் கொரோனாவுக்கு இறந்துள்னர். இவர்களில் 88 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 22 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4571 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு இன்று இறந்தவர்களில் சென்னையில் 22 பேரும், மதுரையில் 9 பேரும், வேலூரில் 7 பேரும், கோவையில் 6 பேரும், செங்கல்பட்டு, விருதுநகரில் தலா 5 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 4 பேரும், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தென்காசி, தேனி, திருச்சியில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடியில் தலா 2 பேரும், அரியலூர், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 30,20,714 மாதிரிகளும், 29,10,468 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *