May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

நீரவ்மோடியின் சொத்துக்கள் ஏலம்; ரூ.24 கோடியை மீட்டது பஞ்சாப் வங்கி

1 min read

Auction of Neeravmodi’s assets; Punjab Bank recovers Rs 24 crore

26-8-2020

போலி ஆவணங்கள் மூலம் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நீரவ் மோடியின் சொத்துக்களை ஏலம்விட்டு ரூ.24 கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கி மீட்டுள்ளது.

நீீரவ்மோடி

மும்பையைச் சேர்ந்தவர் நீரவ்மோடி. இவரும் இவரது உறவினர் மெகுல் கோச்சியும் சேர்ந்து பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்களை கொடுத்து ரூ.13,700 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தனர். இந்த வழக்கில் போலீசாராால் தேடிப்பட்ட நீரவ்மோடி நாட்டை விட்டே தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் தலைமறைவாக இருந்த அவரை லண்டனில் போலீசார் கைது செய்தனர்.
தற்போது லண்டனில் சிறையில் இருக்கும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது.

சொத்துக்கள்

இந்த நிலையில், அவருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
நீரவ் மோடிக்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கில் ஒரு பகுதி கடன் தொகை மீட்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் வரும் நீதிமன்றத்தில் நடைபெறும் பெருநிறுவன நிர்வாக வழக்கைத் தலைமை தாங்கி நடத்திய மத்திய கார்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் பணத்தை மீட்பதில் முதல் தவணையாக 3.25 மில்லியன் டாலரை மீட்டுள்ளது.
இது இந்திய மதிப்பில் ரூ.24 கோடியே 33 லட்சமாகும். நீரவ் மோடியின் சொத்துகள் பணமாக்கப்பட்டு 11.04 மில்லியன் டாலர் அளவிற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பிணையில்லாக் கடன் கொடுத்தவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக தயாராக உள்ளது. இதர செலவினங்கள் கடன் கொடுத்த மற்ற வங்கிகளின் கோரிக்கைகளை பொறுத்து அடுத்தகட்ட மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.