May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது

1 min read


Hall tickets for the NEET exam are provided

26-8-2020

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுகிறது.

நீட் தேர்வு

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
வழக்கமாக மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக நீட் தேர்வை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது ஊரடங்கு நீடிக்கும் நிலையில் தேர்வு எழுத ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் செல்ல வாய்ப்பு இல்லாததால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆகஸ்ட் மாதத்திற்குப்பின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து விடும். அதன்பின் தேர்வை நடத்தலாம் என மத்திய தேர்வு முகமை நினைத்திருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. வருகிற டிசம்பர் மாதம் வரை கொரோனா பரவல் இருக்கத்தான் செய்யும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எனவே இனியும் நீட் தேர்வை நடத்தாமல் இருந்தால் மருத்துவ மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே நீட் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.

நீட் தேர்வு நடத்துவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஹால் டிக்கெட்

இந்த நிலையில் விண்ணப்பங்களை பெற்றிருந்த மத்திய தேர்வு முகமை இன்று( புதன்கிழமை) ஹால்டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் (https:intaneet.nic.in/) ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,843 மையத்தில் தேர்வு நடைபெற இருக்கிறது.

கட்டுப்பாடுகள்

கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மாணர்கள் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். குடிநீர், அனுமதி கடிதம் கொடுண்டு வரவேண்டும். தேர்வு மையத்திற்குள் நுழையும் போது அவர்கள் தரும் முக கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும். தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வருவதற்கு பின்னர் நேரம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

-தி.பாலசுப்பிரமணியன், மூத்த பத்திரிகையாளர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.