மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம்
1 min read
State Governments can obtain loans from the Reserve Bank
27-8-2020
நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெற்று கொள்ளலாம் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என பல்வேறு மாநிலங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்தநிலையில், டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இணை மந்திரி அனுராக் தாகூர், நிதித்துறை செயலாளர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 5 மணி நேரம் நடந்தது.
அதன்பின் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
கடன் பெறலாம்
மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெற்று கொள்ளலாம். மாநிலங்களுக்கு கடன் வழங்க, ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தும். மாநிலங்கள் கடன் பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி.யில் இருசக்கர வாகனங்களை கொண்டு வருவது குறித்து பரிசீலனையில் உள்ளது. வரி விகிதங்களை உயர்த்த பரிசீலனை செய்வது தற்போது சரியான நேரமல்ல. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.