May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

காசநோயாளிகள் யாரையும் கொரோனா தாக்க வில்லை

1 min read

Coronavirus does not infect anyone with tuberculosis

28-8-2020

சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட ஆய்வில் காசநோய்க்காக மருந்து சாப்பிட்ட எந்த நோயாளியையும் கொரோனா தாக்கவில்லை என்று தெரியவந்தது.

கொரோனா

உலகையே அச்சுறுத்திக் கொண்டிக்கும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த நோய் தாக்கியவர்கள் தங்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொண்டால் எளிதில் அதில் இருந்து மீண்டு விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், மற்றவர்களும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சித்த மருந்தையும் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் சத்தான உணவையும் உட்கொள்கிறார்கள்.

காசநோய்

ஏற்கனவே உடல் உபாதைகள் உள்ளவர்கள்தான் கொரோனா அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்குரிய மருந்தை எடுத்துக் கொண்டால் அவர்களை கொரோனா தாக்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

1940-களுக்கு பிறகு இந்தியாவில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் காசநோய் தடுப்பூசி போடப்படுகின்றது. நமது அனைவரின் வலது கையின் மேல் பகுதியில் ஏற்பட்டுள்ள தழும்புதான் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான அடையாளம். இந்த தடுப்பூசியை உலகில் இந்நியா போன்ற நாடுகள் முழுமையாக பயன்படுத்துக்கின்றன.

பிசிஜி தடுப்பூசியை பயன்படுத்தும் நாடுகளில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன.

ஓமந்தூரார் ஆஸ்பத்திரி

அதனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அது பற்றிய ஆய்வையும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவில்லை என்பது தெரியவந்தது.

காசநோயானது பாக்டீரியா தொற்றால் ஏற்பட கூடியது அதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் ஐஜி வகை ஆன்டிபாடிகளை ஏற்படுத்துவதால் அதில் உள்ள ஜி வகை தடுப்பு சக்தி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதாக முதற்கட்ட ஆய்வுகள் தெரியவந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.