May 11, 2024

Seithi Saral

Tamil News Channel

காமராஜரின் தொண்டர், சிவாஜியின் தீவிர ரசிகர் வசந்தகுமார் எம்.பி. கவலைக்கிடம்

1 min read

Kamaraj’s volunteer and Sivaji fan, Vasanthakumar MP Worryingly for corona

28-8-2020

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. எச்.வசந்தகுமார் பெருந்தலைவர் காமராஜரின் தொண்டர். சிவாஜிகணேசனின் தீவிர ரசிகர் ஆவார்.

எச்.வசந்த குமார்

கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யும் தொழில் அதிபருமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.அவர்சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தினமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று திடீரென்று அவரது உடல்நிலை மிகவும் கவலைத்தரும் விதத்தில் உள்ளதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்தார். மேலும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத்தும் பதிவிட்டுள்ளார்.

எச்.வசந்த குமார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக குமரி அனந்தனின் சொந்த தம்பி ஆவார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா.

காமராஜரின் தொண்டர்

வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
பொதுவாக காங்கிரஸ்காரர்கள் மட்டுமின்றி பெரும்பாலானோர் காமராஜரின் தொண்டர்களாக இருப்பார்கள். ஆனால் எச்.வசந்தகுமார் அடிக்கடி தனது பேச்சில் பெருந்தலைவர் காமராஜரின் பெயரை உச்சரிக்காமல் இருந்தது கிடையாது.
அதோடு தனது வசந்த் டியிலும் காமராஜர் புகழை அவ்வப்போது இடம் பெறச் செய்வார். அந்த டிவியில் தேனருவி நிகழ்ச்சியின் முடிவில் காமராஜர் பாடல் கண்டிப்பாக இடம்பெறும்.
அதோடு எச்.வசந்தகுமார் தீவிர சிவாஜி ரசிகரும் கூட. காமராஜர் புகழோடு சிவாஜிகணேசனையும புகழ் பாடுவார்.

வேண்டுதல்

எச்.வசந்த குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் காமராஜரின்தொண்டர்களும் சிவாஜி ரசிகர்களும் அவர் உயிர் பிழைக்க இறைவனே வேண்டு வரைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.