May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

இறுதி தேர்வை நடத்தாமல் பட்டம் வழங்கக்கூடாது; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

1 min read

The degree should not be awarded without conducting a final examination; Judgment of the Supreme Court

28-8-2020

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்தாமல் பட்டம் வழங்ககூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அதேநேரம், கொரோனா காரணமாக தேர்வை தள்ளி வைக்கலாம் என்றும் கூறியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரமணாக கல்லூரி தேர்வை முறையாக நடத்த முடியவில்லை. இதைக் காரணமாக வைத்து, கல்லுாரி இறுதியாண்டு தேர்வை, டெல்லி, மராட்டியம், பஞ்சாப், ஒடிசா, அரியானா, மத்திய பிரதேசம், அரசுகள் ரத்து செய்தது.
இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் நடந்த வழக்கில், தேர்வு நடத்தாமல் வழங்கப்படும் பட்டங்களை அங்கீகரிக்க முடியாது’ என, யு.ஜி.சி.(பல்கலை மானிய குழு) சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இதை எதிர்த்து, மாணவர்கள் சுப்ரிம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நீதிபதிகள் கொண்டஅமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தள்ளி வைக்கலாம்

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேவை நடத்தலாம். ரத்து செய்ய தடை விதிக்க முடியாது. தேர்வை நடத்தாமல் மாநில அரசுகள், மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக்கூடாது. பட்டங்களை வழங்கக்கூடாது. கொரோனா காரணமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம். தேர்வை நடத்த இயலாது என மாநில அரசுகள் கருதினால், யுஜிசியை அணுகி, கால அவகாசம் கேட்கலாம்.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.