இந்திாவில் ஒரே நாளில் 69,921 பேருக்கு கொரோனா
1 min readCorona for 69,921 people in a single day in India
1-9-2020
இந்தியாவில் நேற்று ஒரே நேரத்தில் 69,921 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் எவ்வளவோ நடவடிக்கை எடுத்து வந்தாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்பட வில்லை. கொரோனா பரவல் பற்றி தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட தகவல் வருமாறு:-
இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதவாது நேற்று( திங்கட்கிழமை) மட்டும் இந்தியாவில் 69,921 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால்
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 36,91,167 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 65,081 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து 28,39,883 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 7,85,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
819 பேர் சாவு
நேற்று மட்டும 819 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர் . இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 65,288 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் தற்போது 21.59 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1.78 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.