உமா மகேசுவர விரதம்
1 min readUma mageswara viratham
1-9-2020
பவுர்ணமி நாளில் உமா மகேசுவர விரதம் மேற்கொள்ளலாம். ஆவணி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் பவுர்ணமி நாள் என்பது பாத்ரபத சுத்த பவுர்ணமி ஆகும். அன்று உமாமகேசுவர விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள் முன்தின நாளே அதற்கான ஏற்பாடுகளை செய்து முடிக்க வேண்டும். பவுர்ணமி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சிவபூஜை செய்ய வேண்டும். நான்கு கால பூஜையை நடத்தி 16 சுமங்கலி பெண்களுக்கு எண்ணெய் சேர்க்காத உணவை சாப்பிட கொடுக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் பால் மட்டுமே அருந்த வேண்டும். இவ்வாறு செய்தால் உமாமகேசுவரர் அருள் கிடைக்கும். மேலும் சகலவிதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இந்த சிறப்புக்குரிய நாள் இந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை ) வருகிறது.
அன்றைய தினம் சாதுர்மாஸ்ய வரதம் மேற்கொள்ளும் (சன்னியாசிகள் யாத்திரை செல்லும் நாள்) சன்னியாசிகளை தரித்து அவர்களிடம் ஆசி பெறுவது நல்லது. இதனால் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் கிடைக்கும்.