December 8, 2024

Seithi Saral

Tamil News Channel

பெண்போலீசின் முகத்தை கத்தியால் கீறிய வழிப்பறி கொள்ளையன் கைது

1 min read

Robber arrested for stabbing female police officer in the face with a knife

2-9-2020

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் பெண் போலீசின் முகத்தை கத்தியால் கீறினான். அவனை போலீசார் கைது செய்தனர்.

பெண் போலீஸ்

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சூர்யவதனி (வயது 32). உளவுத்துறையில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து திருவல்லிக்கேணியில் இருந்து உடன் வேலை பார்க்கும் யாஷ்மின் என்பவருடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார்.
சிந்தாதிரிப்பேட்டை கூவம் கால்வாய் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள், மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்ற சூர்யவதனி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர்.
அவர், சத்தம் போட்டதும் மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பினர்.

கத்தியால் கீறினார்

இந்த நிலையில்சூரியவதனி தனது கணவர் ஆட்டோவில் வந்து தன்னைஅழைத்து வருவதாக கூறி எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே இறங்கிக் கொண்டார்.
பின்னர் அவர் காந்தி இர்வின் பாலம் வழியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போதும் ஏற்கனவே நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீண்டும் அங்கு வந்து, சூர்யவதனியை வழிமறித்து அவர் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றனர்.
அவர் ‘நான் போலீஸ் என்னை விடுங்கள்’ என்று கூறி சத்தம் போட்டார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம மனிதர்கள், அவரது முகத்தில் கடுமையாக தாக்கி சிறிய கத்தியால் முகத்தை கிழித்தனர்.

சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
காயமடைந்த பெண் போலீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து, எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், பெண் காவலரை கத்தியால் கிழித்து விட்டு தப்பியது சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வழிப்பறி ஆசாமி ரஞ்சித் (26) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.