குற்றாலத்தில் தொடரும் தடை -குளிக்க வராதீங்க…
1 min read3.9.2020
Courtallam ban continues – do not come to batheகுற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முதல்வர் கடந்த 30ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்குமென தெரிவித்துள்ளார்.
அதன்படி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றாலம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தடை அமலில் இருக்கும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்தினருக்கும், காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு தந்து, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.