பிரதமர் மோடிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த கொலை மிரட்டல்
1 min read
Assassination threat to Prime Minister Modi from abroad
4-9-2020
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு இ-மெயில் வந்தது. இதனால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
கொலை மிரட்டல்
கடந்த 8-ந் தேதி தேதி, என்.ஐ.ஏ., இமெயில் முகவரிக்கு, பிரதமர் மோடி கொலை செய்யப்பட வேண்டும் என்ற வாசகங்களுடன் மெயில் ஒன்று வந்தது. இதனையடுத்து, பிரதமரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என எஸ்.பி.ஜி., பாதுகாப்பு படைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இமெயில் குறித்து விசாரிக்க ‘ரா’ உளவுத்துறை உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட விசாரணையில், வெளிநாட்டிலிருந்து இந்த மிரட்டல் மெயில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.