சிங்கம் படத்தை எடுத்துக் காட்டி பேசிய மோடி
1 min readModi took a picture of a Singam and spoke
4-9-2020
ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி சிங்கம் படத்தை மேற்கோள் காட்டினார்.
மோடி
ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் இளம் ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று உரையாடினார். அப்போது பணி தொடர்புடைய மனஅழுத்தத்தினை எதிர்கொள்ள யோகா உள்ளிட்டவைகளை மேற்கொள்ளும்படி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதன்ன்பின் அவர்களிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா
கொரோனா பாதிப்பு போன்ற காலத்தில் நல்ல முறையில் பணியாற்றி, காக்கி சீருடையில் இருந்த போலீசாரின் முகம் பொதுமக்களின் மனதில் நன்றாக பதிந்துள்ளது .
உங்களது காக்கி சீருடையின் அதிகாரத்தினை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு பதிலாக அதனை அணிந்து கொள்வதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். உங்களுடைய காக்கி சீருடைக்கான மரியாதையை ஒருபொழுதும் இழக்காதீர்கள்.
போலீஸ் அதிகாரிகள் பணியில் சேரும்பொழுது, ஒவ்வொருவதும் நம்மை கண்டு பயப்பட வேண்டும். குறிப்பிடும்படியாக நமது ஏரியா ரவுடிகள் அனைவரும் பயப்பட வேண்டும் என நினைக்கின்றனர்.
இவ்வாறு பேசிய மோடி சிங்கம் படத்தை மேற்கோள் காட்டினார்.
சிங்கம்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படம் இந்தியிலும் அதேபெயரில் வெளியிடப்பட்டது. இந்தி படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் நேர்மை தவறாத மற்றும் கடமையில் இருந்து விலகாத போலீஸ் அதிகாரியாக நாயகன் வேடம் அமைந்திருக்கும். இதனை சுட்டி காட்டி பிரதமர் மோடி பேசும்பொழுது, “சிங்கம் போன்ற படங்களை பார்த்து விட்டு, தங்களை பற்றி அவர்கள் பெரிய அளவில் நினைத்து கொள்கின்றனர்.
அதனால் உண்மையான பணி புறக்கணிக்கப்படுகிறது. இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும். நமது பணி புறக்கணிக்கப்படவில்லை என்பதனை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் ” என்றார்.