தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் மரணம்
1 min read
thelugu acter Jeyaprkash died
8-9-2020
பிரபல தெலுங்கு சினிமா நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மரணம் அடைந்தார்.
தெலுங்கு நடிகர்
தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக இருந்தவர் ஜெயபிரகாஷ்(வயது 74). இவர் வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர பாத்திரங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றவர்.
இவர் தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் உள்பட ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார்.
மரணம்
இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரை அதிர்ச்சி அடைந்தனர். அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.