August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடி

1 min read

Tirupati temple bill income of Rs 1 crore

8-9-2020

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.1 கோடி வருமானம் கிடைத்தது.

திருப்பதி

பணக்கார சாமி என்று பெயர் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். ஆண்டிற்கு 1000 கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் மூலம் வருவாய் கிடைக்கும். அப்படி அதிகப்படியான வருமானம் கிடைப்பதால் அந்தக் கோவிலில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த ஊரடங்கு காலங்களில்கூட ‘இ – உண்டியல்’ மூலம் பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்தி வந்தனர்.

ரூ.1 கோடி

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கபட்டதால் குறைந்த அளவு பக்தர்களை கோவிலுக்கு அனுமதிக்கிறார்கள். ஆனாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 ஆயிரத்து 349 பேர் திருப்பதியில் தரிசித்தனர்.

இந்த நிலையில் திருப்பதி கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கிற்கு பின் தொடங்கிய தரிசனத்தில் திருப்பதி கோவிலுக்கு கிடைத்த முதல் பெரிய வருமானம் இது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்க இருக்கிறது என்றும் அதற்காக வருகிற 15-ந் தேதி கோவிலை சுத்தப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்க இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வருடாந்திர பிரம்மோற்ஸவத்தை தேவஸ்தானம் தனிமையில் நடத்த முடிவு செய்துள்ளது. எனவே செப். 15 மற்றும் செப். 19 முதல் செப். 27ம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *