சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்பு-வக்கீல் சொல்கிறார்
1 min read
Sasikala will be released soon -lawyer says
10-9-2020
சிறயைில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாகி வெளியே வரவாய்ப்பு இருப்பதாக அவரது வக்கீல் சொல்கிறார்.
சசிகலா
ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று, பெங்களூரு, பரப்பன அக்ரஹார
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கோர்ட்டு விதித்த அபராதமான 10 கோடி ரூபாயை செலுத்தினால் அவர் விரைவில் வெளியே வரலாம் என்று கூறப்படகிறது. இதற்காக அவது வக்கீல்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இது குறித்து சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்துார் பாண்டியன் கூறியதாவது:-
தற்போது கொரோனா பரவல் காரணமாக சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க முடியவில்லை. அவரை நான் கடைசியாக கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதிதான் சந்தித்தேன். சிறையில் இருப்பவர்களை அவரது குடும்பத்தினரோ வக்கீல்களோ பார்க்க அனுமதி இல்லை. அதற்கான அனுமதி கிடைத்ததும் நான் சிறைக்கு சென்று, அவரை சந்திப்பேன்.
விரைவில் விடுதலை
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே சசிகலா, மூன்றில் இரண்டு பங்கு சிறை தண்டனையை அனுபவித்து விட்டார். எனவே, சிறை தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி பெறுகிறார். அதன் அடிப்படையில், அவரை வெளியில் அழைத்து வருவதற்கான, சட்டப் நடமுறைகளை செய்து வந்தேன்.
கடந்த மார்ச் மாதம் இறுதியில், முடிவு தெரியும் சூழல் இருந்தது. மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்து, அனுமதி வழங்கப்படாததால், சிறை நிர்வாகம் என்ன முடிவெடுத்தது என்பது தெரியவில்லை. முடிவு எடுக்கப்பட்டிருந்தால், தகவல் வந்திருக்கும்; நேரில் செல்லும்போது தகவல் தெரியும்.சசிகலாவிற்கு சாதாரண சலுகைகள் வழங்கினாலே, அவர் வெளியில் வர முடியும்.
கர்நாடக சிறைத் துறை, ஒரு மாதத்திற்கு மூன்று நாட்கள் வீதம், தண்டனை குறைப்பு சலுகை வழங்குகிறது. இது, அனைத்து சிறைவாசிகளுக்கும் பொருந்தும்.
ஊழல் தடுப்பு பிரிவு குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட நபர்களுக்கு, எவ்வித சலுகையும் கிடையாது என, விதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை. இம்மாதம் வரை, 43 மாதங்கள் சிறை வாசத்தை முடிக்கிறார்.அதன் அடிப்படையில், 129 நாட்கள் தண்டனை குறைப்பு வரும். பரோலில் வந்த, 17 நாட்கள் கழித்து, சிறை விதிகளின் அடிப்படையில், இம்மாதம் இறுதியில், அவர் வெளியே வருவதற்கு, அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு வக்கீல் கூறினார்.