June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

“புதிய கல்வி கொள்கையை அப்படியே அமல்படுத்த வேண்டும்”; மோடி பேச்சு

1 min read

“The new education policy must be implemented as it is”; Modi’s speech

11-9-2020

புதிய கல்வி கொள்கையை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

புதிய கல்வி கொள்கை

கல்விக்கொள்கை தொடர்பாக ‛21ம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி கொள்கை’ என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஒவ்வொரு பிராந்தியமும் மாறினாலும் நமது கல்வி முறை மாறவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை
பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியமாக உள்ளது.
புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும்.

புதிய இந்தியாவின் தேவைக்காக கல்வி கொள்கையை அமைத்திருக்கிறோம்.

அப்படியே அமல்படுத்த வேண்டும்

புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கைக்காக 5 ஆண்டுகள் உழைத்தும் பணி இன்னும் முடியவில்லை. இக்கல்வி கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது.

மழலை கல்வியை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். அனைவரும் ஒருங்கிணைந்து என்ன உள்ளதோ புதிய கல்வி கொள்கையை அப்படியே அமல்படுத்த வேண்டும்
புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும். ஆனால் அதை வெற்றிகரமாக அமல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம்.
இவ்வாறு மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.