June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் 5,519 பேருக்கு இன்று கொரோனா- 6,006 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona to 5,519 people in Tamil Nadu today – 6,006 people discharged

11-9-2020

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 5,519 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் 6,006 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. தினமும் கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை ) ஒரே நாளில் மட்டும் 5,519 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,91,5916ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 77 பேர் இறந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,321 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 6,006 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,35,422ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 987 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,46,593ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இறப்பு 2,942 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 12 வது நாளாக 5 ஆயிரத்திற்கும் குறைவாக பாதிப்பு பதிவாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *