June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

1 min read

Today’s corona situation in Tenkasi district

11-9-2020
தென்காசி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. கடையத்தில் 2 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இது பற்றி முழு விவரம் வருமாறு:-

48 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை ) ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,140 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 78,819 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 877 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 74 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை இந்த மாவட்டத்தில் 5,297 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.
தற்போது 636 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊர் வாரியாக…

இன்று ஆலங்குளத்தில் 15 பேருக்கும், கடையத்தில் 2 பேருக்கும், கடையநல்லூரில் 3 பேருக்கும், கீழப்பாவூரில் 2 பேருக்கும், மேலநீலிதநல்லூரில் 2 பேருக்கும், தென்காசியில் 21 பேருக்கும், வாசுதேவநல்லூரில் 3 பேருக்கும் இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *