June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

1 min read

Amitsha was again admitted to Ames Hospital

13-9-2020

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அமித்ஷா

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவிற்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 2–ந் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 14-ந் தேதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.
ஆனல் அதன்பின் 18-ந் தேதி அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாத இறுதியில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மீண்டும்

இந்த நிலையில் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று (சனிக்கிழமை) இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.