கொரோனா சாவுக்கு முடிவு கட்டிய கனடா
1 min read
Canada puts an end to Corona’s death
13-9-2020
கனடா நாடு 6 மாதங்களுக்குப்பிறகு கொரோனா சாவுக்கு முடிவு கட்டியுள்ளது.
கனடா
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. தற்போது உலக நாடுகளில் அதிகமாக கொரோனா பாதித்த நாடுகளில் இந்திய இடம் பெற்றுவிட்டது. அதேநேரம் இந்தியாவின் மக்கள் தொகையை ஒப்பிடும்போதும், இறப்பை கணக்கிடும்போதும் இந்தியாவின் பாதிப்பு குறைவுதான்.
வட அமெரிக்க நாடான கனடாவிலும் கொரோனா பாதிப்பு இருந்தது. அந்த நாட்டு மக்கள் தொகை 3 கோடியே 7 0 லட்சம் ஆகும். அங்கு இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1லட்சத்து20 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர்.
இதுவரை அந்த நாட்டில் கொரோனால் 9,163 இறந்துள்ளனர்.
இறப்பு
கடந்த மார்ச் மாதம் அங்கு கொரோனா பரவினானலும் சாவு இல்லாமல் இருந்தது. ஆனால் அதன்பின் இறப்பு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த அந்த நாடு பெரும் முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக கடந்த ஒருவாரமாக பெரும்பாலும் இறப்பு ஒற்றை இலக்கில்தான் இருந்தது.
இந்த நிலையில கடந்த 6 மாதத்திற்கு பின்னர் முதல் முறையாக நேற்று முன்தினம் ( 11-ந் தேதி) அங்கு கொரோனா இறப்பு எதுவும் இல்லாத நாளாக இருந்தது.
இச்சாதனையை மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் கொண்டாடினர்.
இறப்பு விகிதம் குறைந்துள்ள போதும் கனடாவின் பெரிய மாகாணங்களான கியூபெக் மற்றும் ஒன்டாரியோவில் தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. மொத்த பாதிப்பில் 80 சதவீதம் இந்த இரு மாகாணங்களிலும்தான் உள்ளது. எனவே அந்த மாகாணங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படாமல் உள்ளன. உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் வரையும், வெளி நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.