இந்தியாவில் எரிபொருள் 11.5 சதவீதம் குறைய வாய்ப்பு
1 min read
Fuel in India is likely to fall by 11.5 per cent
19-9-2020
இந்தியாவில் நடப்பாண்டில் எரிபொருள் 11.5 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிட்ச் சொலுசன்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டு உள்ளது.
எரிபொருள்
இந்தியாவின் நடப்பு நிதியாண்டில் எரிபொருள் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர், தொழில்துறை ஆகிய அனைத்து நிலைகளிலும் எரிபொருள் தேவை குறைந்துள்ளதால் அது செங்குத்தான சரிவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் நடப்பாண்டில் எரிபொருள் தேவை 9.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் அது மறு ஆய்வு செய்யப்பட்டு அது மேலும் குறைந்து 11.5 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பல கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கதப்பட்டன. ஆனாலும் கொரோனா ஊரடங்கால் வேலையின்மை, பொருளாதார இழப்பு, கொரோனா அச்சம் காரணமாக வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளதால் எரிபொருள் தேவை குறைவதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.