ரஜினிகாந்த் 6.56 லட்சம் வரியை கட்டினார்; அனுபவமே பாடம் என கருத்து
1 min read
Rajinikanth paid Rs 6.56 lakh in taxes
15/10/200
சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டப சொத்து வரியான ரூ.6 லடசத்து 56 ஆயிரதத்தை ரஜினிகாந்த் கட்டினார். அவர் அனுபவமே பாடம் என கூறியுள்ளார்.
ரஜினியின் வரி பாக்கி
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமாக ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இதற்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரைக்கான ஆறு மாத காலத்துக்கு ரூ. 6.50 லட்சம் சொத்து வரி பாக்கி உள்ளது. அந்தத் தொகையைசெலுத்தும்படி சென்னை மாநகராட்சி ‘நோட்டீஸ்’ அனுப்பியது.
இதையடுத்து, சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, சென்னை ஐகோர்ட்டில் ரஜினி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கானது நேரத்தை வீணடிப்பதற்காகவும் அதற்காக அபராதம் விதிக்கப் போவதாகவும் எச்சரித்தார். இதனை அடுத்து ரஜினிகாந்த் வழக்கை வாபஸ் பெற்றார். அதன்பின் அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
பணத்தை கட்டினார்
இந்த நிலையில், இன்று ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரி தொகை ஆறு லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை ரஜினி செலுத்தினார்
அனுபவமே…
இந்த விவகாரம் குறித்து ரஜினி காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‛”ராகவேந்திரா மண்டப சொத்து வரி.. நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்,’ என்று பதிவிட்டிருந்தார்.
ரஜினிகாந்த்தின் இந்த பதிவு வலைதளத்தில் இதில் வரைலாக பரவி வருகிறது. “அனுபவமே பாடம்” என்னும் ஹேஸ்டேக்குகள் தற்போது இணையத்தில் டிரண்டாகியுள்ளது. ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் வைரலாவது போல் இப்போது, அவர் டுவீட்டரில் பதிவிட்டுள்ள இந்த வார்த்தையும் டிரண்டாகி வருகிறது.