பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
1 min read
Promos missile test successful
17/10/2020
பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
பிரமோஸ் ஏவுகணை
இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), ரஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான், கடல் என 3 விதமான பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடலில் இருந்து ஏவுகணையை சோதனை செய்யும் முயற்சி இன்று ( ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.
அரபிக்கடலில்கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
வெற்றி
இந்த ஏவுகணை 300 கிலோ மீட்டர் தொலையில் உள்ளகுறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.