“அடுத்த ஆண்டுக்குள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரலாம்”- நிபுணர் குழு அறிக்கை
1 min read“Corona can be brought under control by next year” – expert panel report
17-/10/2020
இந்தியாவில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் அடுத்த ஆண்டில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்று நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
கொரோனா
கொரோனா கட்டுப்படுத்துவது குறித்தும், கொரோனா தடுப்பூசி பற்றியும் ஆராய தேசிய நிபுணர் குழுவை (என்.இ.ஜி.வி.ஏ.சி.) மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவின் தலைவராக நிடி ஆயோக் அமைப்பின் சுகாதார குழு உறுப்பினர் விகே பால் இருந்தார். மேலும் இந்தக் குழுவில் ஐ.ஐ.டி. மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர்களும் இடம்பெற்று இருந்தனர்.
இந்த குழு கொரோனா குறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உச்சம்
இந்தியாவில் கொரோனாவின் நிலை உச்சத்தை தொட்டுஇப்போது அதை கடந்துவிட்டது. கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடித்தால் அடுத்த ஆண்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திவிடலாம்.
வருங்ககாலம் குளிர்காலம் மற்றும் பண்டிகை காலம் என்பதால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்தினால் கொரோனா பரவல் அதிகமாகும்.
இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.இந்தியாவில் தற்போது 75 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட் உள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் 26 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 105 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
கேரளா
கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தியிருக்காவிட்டால், ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 26 லட்சம் பேர் கொரோனாவினால் பலியாகியிருக்க வாய்ப்பு உள்ளது. அதிகளவு பேர் கூடியதால், கொரோனா பரவல் அதிகரித்ததற்கு ஆதாரம் உள்ளது.
கேரளாவில் ஆகஸ்டு 22-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை ஓணம் பண்டிகைக்கு பிறகு அங்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தற்போது அங்கு கொரோனா பரவல் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2வது அலைக்கு வாய்ப்பு
இந்த ஆய்வு தொடர்பாக வி.கே. பால் கூறியதாவது:-
கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதனால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பல மாநிலங்களில் பரவல் நிலைப்பெற்றுள்ளது. இருப்பினும், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் 4 யூனியன் பிரதேசங்களிலும் பரவல் அதிகரித்துள்ளது.
பல ஐரோப்பிய நாடுகளில், குளிர்காலத்தில் கொரோனா வைரசின் 2வது அலை உள்ளதை பார்க்க முடிகிறது. இதனால், இந்தியாவில் 2வது பரவல் வராது என்பதை நிராகரித்துவிட முடியாது. அது நடக்கலாம். வைரஸ் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த உடன், அதனை விநியோகம் செய்யவும், நாட்டு மக்களுக்கு எளிதில் கிடைக்க செய்வதற்கும் தேவையான வசதிகள் உள்ளது. இது பற்றி கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.