நெல்லையில் பால் உற்பத்தியாளர்களுக்கு புல் வெட்டும் கருவி
1 min readGrass cutting tool for milk producers in Nellai
19/10/2020
நெல்லையில் கூட்டுறவு பால் ஒன்றியத்தின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு புல் வெட்டும் கருவி வழங்கப்பட்டது.
புல் வெட்டும் கருவி
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் 23 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5.26 லட்சம் மதிப்பில் மானிய விலையில் புல் வெட்டும் கருவிகளை மாவட்ட கலெக்டர் தலைவர் ஷில்பா வழங்கினார்.
அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
தமிழக அரசு பால் உற்பத்தியினை பெருக்குவதற்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக லாபம் கிடைத்திடவும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கால்நடைகளுக்கு தேவையான தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் கால்நடை தீவணங்கள் என பல்வேறு விதமான பால் உற்பத்தியினை பெருக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மானிய விலையில்…
திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியனை பெருக்குவதற்கு திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் 23 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5.26 லட்சம் மதிப்பில் மானிய விலையில் யந்திர புல் வெட்டும் கருவிகள் வழங்கப்பட்டது. ஒரு இயந்திரத்தின் விலை ரூ.22,899. அதில் அரசு மானியமாக ரூ.15,000 பயனாளிக்கு வழங்கப்படும்.பயனாளி ரூ.7,899- மட்டும் செலுத்தி இயந்திரத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் தேவையானவர்கள் கூட்டுறவு பால் ஒன்றியத்தினை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆவின் தலைவர் சுதா.கே.பரமசிவம் ஆவின் பொது மேலாளர் பொ.பார்த்த சாரதி , துணை இயக்குநர் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி மரு. தியொபிலாஸ்ரோஐர் உதவி பொது மேலாளர் மரு.பாசு உட்பட அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.