தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழக அரச ரூ.10 கோடி நிவாரண உதவி
1 min readTamil Nadu government provides Rs 10 crore relief to Telangana
19/10/2020
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிவாரண உதவி வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மழை வெள்ளம்
தெலுங்கானா மாநிலத்தில் மழை வெள்ளப்பாதிப்பு அதிகரித்து உள்ளது. குறிப்பாக தலைநகர் ஐதராபாத்தில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை மழைக்கு 69 பேர் இறந்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ரூ.10 கோடி
தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தெலுங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தெலுங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதி உள்ள கடிதத்தில், “தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தெலுங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தெலுங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது” என்று அதில் தெரிவித்துள்ளார்.