7.5 சதவீத ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நிறைவேற்ற நடவடிக்கை; முதல்வர் தகவல்
1 min readMeasures to implement the 7.5 per cent quota this year; Cheep Minister Information
30/10/2020
மருத்துவ படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பசும்பொன் முத்துராமலிங்கம்
பசும்பொன் முத்துராமலிங்கம் குருபூஜை நடந்தது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தி உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினார்.
பசும்பொன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இடஒதுக்கீடு
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பல்வேறு வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. மேலும் மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்து நிறைவேற்றி உள்ளது.
மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டே…
உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 7.5 சதவீத மருத்துவ உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.