அமைச்சர் துரைக்கண்ணு உடல், அரசு மரியாதையுடன் அடக்கம்
1 min read
Minister Durakkannu body, buried with state honors
1/11/2020
மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணு
தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்தவர் துரைக்கண்ணு. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலனஸ் மூலம் அவரது சொந்த ஊரான ராஜகிரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பகல் 1 மணியளவில் ராஜகிரி கிராமத்திற்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் வந்தடைந்தது. அவரது உடலுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
அடக்கம்
அதன்பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் வன்னியவாடி அருகே உள்ள தென்னந்தோப்பில் 63 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.