June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு

1 min read

Committee to investigate Anna University Vice Chancellor Surappa

13/11/2020

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

துணை வேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அவர் புகார்கள் எழுப்பப்பட்டன.

இதனால், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

குழு தரும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரியர் தேர்வு விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது புகார் எழுப்பப்பட்டதாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

கவர்னருடன் சந்திப்பு

இந்த நிலையில் துணை வேந்தர் சூரப்பா தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், குழுவை அமைத்துள்ள தமிழக அரசு, 3 மாதங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கு சிறப்பு தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணை குழு அமைத்தது அதிர்ச்சியளிப்பதாக சூரப்பா தெரிவித்திருந்த நிலையில் கவர்னரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.