June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை மலைஏறி தரிக்க தடை

1 min read

Thiruvannamalai Karthika Thibam is not allowed to climb the mountain

13/11/2020

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கும் மலைமீது ஏறி தீபத்தை தரிசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணமாலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த தீபத் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்தாவது நாளன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும். இதனைக் காண திருவண்ணாமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்வார்கள்.

கிரிவலத்திற்குத் தடை

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். மேலும் தீபத் திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகாதீபம் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு தீபத் திருவிழா குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கார்த்திகை தீபத் திருவிழாவானது 17.11.2020 அன்று தூர்க்கை அம்மன் உற்சவததில் தொடங்கி 3.12.2020 அன்று சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 20-ந் தேதியன்று கொடியேற்றப்படும். அதனை தொடர்ந்து 10-ம் நாள் 29.11.2020 அன்று கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

ஆன் லைன்

  • இந்த விழாவின் போது 29ஆம் தேதி நடைபெறும் தீபத் திருநாள் தவிர, நவம்பர் 17-ந் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை தினந்தோறும் சுமார் 5000 பக்தர்களுக்கு சவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, முறையான அனுமதிச் சீட்டு பெற்ற பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • தீபத் திருநாளன்று அண்ணாமலையார் மலை மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
  • 29.11.2020 அன்று பொதுமக்கள், பக்தர்கள் கோவிலில் உள்ளே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
  • இந்தநிகழச்சிகள் தொலைகாட்சி, யூடியூப், திருக்கோவில் இணையத்தளம், அரசு கேபிள் தொலைகாட்சி மற்றும் உள்ளூர் தொலைகாட்சிகள் மூலம் ஒளிப்பரப்பாகும்.
  • தீபத் திருவிழா நாட்கள் மற்றும் அதனை தொடர்ந்து வரப்போகும் பவுர்ணமி நாளன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை.
  • கிரிவலப் பாதை மற்றும் நகரப் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை.
  • இந்த வருட தீபத் திருநாளன்று 28.11.2020 முதல் 30.11.2020 வரை சிறப்பு பேருந்துகள் வசதி கிடையாது.

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thiruvannamalai Karthika Thibam is not allowed to climb the mountain

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.