தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது கொரோனா பாதிப்பு
1 min read
In Tamil Nadu, the corona effect was less than 2,000
14/11/2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. மராட்டிய மாநிலத்திற்கு அடுத்த நிலையில் இருந்ததால் தமிழக மக்கள் அதிகமாக பீதியில் இருந்தனர்.
ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக 3 ஆயிரத்துக்கும் கீழ் நிலைக்கு வந்தது.
நேற்று ( வெள்ளிக்கிழமை) 2 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் படி நேற்று ( வெள்ளிக்கிழமை) மட்டும் 1, 939 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 460 ஆனது. இவர்களில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்கும்.
டிஸ்சார்ஜ்
கொரோனா கண்டறியப்பட்டவர்களில் தற்போது 17 ஆயிரத்து 748 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளிலேயே தனிமையாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 2, 572 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7 லட்சத்து 25 ஆயிரத்து 258 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 14 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக…
தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரதம் மாவட்ட வாரியாக வருமாறு (இதில் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவர்களும் அடங்கும்):-
அரியலூர் – 68
செங்கல்பட்டு – 901
சென்னை – 5,469
கோவை – 971
கடலூர் – 222
தர்மபுரி – 204
திண்டுக்கல் – 150
ஈரோடு – 725
கள்ளக்குறிச்சி – 126
காஞ்சிபுரம் – 530
கன்னியாகுமரி – 246
கரூர் – 314
கிருஷ்ணகிரி – 351
மதுரை – 406
நாகை – 349
நாமக்கல் – 424
நீலகிரி – 218
பெரம்பலூர் – 50
புதுக்கோட்டை – 192
ராமநாதபுரம் – 62
ராணிப்பேட்டை – 235
சேலம் – 872
சிவகங்கை – 152
தென்காசி – 80
தஞ்சாவூர் – 257
தேனி – 79
திருப்பத்தூர் – 130
திருவள்ளூர் – 974
திருவண்ணாமலை – 387
திருவாரூர் – 241
தூத்துக்குடி – 297
திருநெல்வேலி – 267
திருப்பூர் – 889
திருச்சி – 305
வேலூர் – 251
விழுப்புரம் – 254
விருதுநகர் – 98
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 2
உள்நாடு – 0
ரெயில் நிலைய கண்காணிப்பு – 0
மொத்தம் – 17,748