எஸ்.எஸ்.ஆர். மகன் தி.மு.க.வில் இணைந்தார்
1 min read
S.S.R. The son Rajendra Kumar joined the DMK
24/11/2020
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மகனுமான ராஜேந்திரகுமார், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் மகன்
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்( எஸ்.எஸ்.ஆர்) மகன் ராஜேந்திரகுமார். முன்னாள் எம்.பி.யான இவர் அ.தி.மு.க.வில் இருந்துவந்தார்.
தற்போது அந்தக் கட்சியில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஏ. ராஜா, நாடாளுமன்ற மேலவை எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் கட்சியின் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
ராஜேந்திரகுமார் கடந்த 1989ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் செங்கல்பட்டு தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை எஸ்.எஸ். ராஜேந்திரன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு அந்த தேர்தலில் பிற தொகுதிகளுடன் ஒப்பிடும்பொழுத, அதிக வாக்கு வித்தியாசத்தில் எம்.எல்.ஏ.வான பெருமையை பெற்றவர் ஆவார்.