June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா உறுதி

1 min read

Corona confirmed for 1,557 people in Tamil Nadu today

24/11/2020

தமிழகத்தில் இன்று மட்டும் 1,557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று ( செவ்வாய்க்கிழமை ) மட்டும் 1,557 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 73 ஆயிரத்து 176ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,910 பேர் கொரோனாவில் இருந்து ககுணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து இதுவரை 7,49,662 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

17 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 17 பேர் இறந்துள்ளனர். இது வரை தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,639 ஆகும்.

சென்னையில்…

சென்னையில் இன்று ஒரே நாளில் 469 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 2,12,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பரிசோதனை

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 16 லட்சத்து 73 ஆயிரத்து 521 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 67,271 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 217 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 11,875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,67,111 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 944 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,06,032 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 613 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநங்கை

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 33 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வருமாறு:-
கோடம்பாக்கம் – 376 பேர்
அண்ணா நகர் – 460 பேர்
தேனாம்பேட்டை – 387 பேர்
தண்டையார்பேட்டை – 278 பேர்
ராயபுரம் – 314 பேர்
அடையாறு- 350 பேர்
திரு.வி.க. நகர்- 372 பேர்
வளசரவாக்கம்- 353 பேர்
அம்பத்தூர்- 319 பேர்
திருவொற்றியூர்- 149 பேர்
மாதவரம்- 204 பேர்
ஆலந்தூர்- 190 பேர்
பெருங்குடி- 179 பேர்
சோழிங்கநல்லூர்- 79 பேர்
மணலியில் – 56 பேர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *