May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 பேர் கொரோனாவுக்கு பலி

1 min read

In the United States, 2,000 people die of corona in a single day

26/11/2020

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,000 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா

சீனாவின் உகான் நகரில் உருவானா கொரோனா என்னும் கொடூர வைரஸ் உலகம் முழுவதும் பரவி பலரை கொன்றுகுவித்து வருகிறது. இந்த வைரஸ் உருவாகி கிட்டத்தட்ட ஓராண்டுகள் ஆகப்போகிறது. ஆனாலும் இதன் பரவல் குறைந்த பாடில்லை.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 கோடியே 7 லட்சத்து 45 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 27 ஆயிரத்து 215 ஆக உள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரத்து 411 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 1 கோடியே 72 லட்சத்து 68 ஆயிரத்து 248 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்கா

உலக நாடுகளில் அமெரிக்காவைத்தான் இந்த கொரோனா அதிகமாக ஆட்டிப்படைக்கிறது. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டியுளளது. அங்கு கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 2,000 பேர் பலியாகியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,39,882 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று ) 2,046 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை மொத்த உயிரிழப்பு 2,68,262 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78,08,059 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 50,63,561 போ தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 24,150 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நாடுகள் வாரியாக…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடுகள் வாரியாக வருமாறு:-

அமெரிக்கா பாதிப்பு- 1,31,35,669
இந்தியா – 92,66,697
பிரேசில் – 61,66,898
பிரான்ஸ் – 21,70,097
ரஷியா – 21,62,503
ஸ்பெயின் -16,22,632
இங்கிலாந்து – 15,57,007
இத்தாலி – 14,80,874
அர்ஜென்டினா – 13,90,388
கொலம்பியா – 12,70,991
மெக்சிகோ – 10,60,152
ஜெர்மனி – 9,83,731
பெரு – 9,52,459
போலந்து – 9,24,422
ஈரான்- 8,94,385
தென்னாப்பிரிக்கா – 7,75,502

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.