May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பத்துவிதமான கார்த்திகை தீபங்களும் பலன்களும்

1 min read

Ten types of Karthika lights and benefits

28/11/2020
திருக்கார்திகை அன்று சூரியன் அஸ்தமனம் ஆகும்போது எல்லோரும் தங்கள் வீடுகளை அகல் விளக்குளால் அலங்கரிப்பர். சிலர் விதவிதமான முறையில் விளக்குகளை வரிசைப்படுத்தி வழிபடுவர்.
திருக்கார்திகை அன்று பத்துவிதமான தீபங்களை ஏற்றலாம் என்றும் அதற்கு ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்& துள்ளனர்.அதன் விவரங்களை காணலாம்.
தரையில் அகல்விளக்குகளை வரிசையாக ஏற்றுவது ஆவளி தீபமாகும். இப்படி ஏற்றுவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
கோலம் போட்டு அதில் அகல் விளக்குகளை வட்டமாக வைத்து தீபம் ஏற்றுவது அலங்கார தீபமாகும். இப்படி ஏற்றுவதால் வீடு&மனை வாங்கும் பாக்கியம் கிடைக்கும்.
சாமி திருஉருவங்களை கோலத்தில் சித்திரமாக வரைந்து அதனை சுற்றி விளக்கு ஏற்றி வணங்குவது சித்திர தீபம். இப்படி வணங்குவ& தால் எந்த சாமியின் சித்திரம் வரைந்துள்ளோமோ அந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும். மேலும் தொழில் விருத்தி அடையும்.
மாலை வடியில் தீபங்களை ஏற்றி வழிபடுவதற்கு மாலா தீபம் என்று அழைக்கப்படுகிறது. இப்படி வணங்கினால் வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.
அடுக்குகள் அமைத்து அதில் தீபங்கள் ஏற்றுவதற்கு அடுக்கு தீபம் அல்லது மேருதீபம் என்று பெயர். இதில் மொத்தம் ஏழு அடுக்குகள் அமைக்க வேண்டும். மேல் அடுக்கில் ஒரு தீபமும், அடுத்த கீழ் அடுக்கில் 8 தீபங்களும், அடுத்து 16 தீபங்களும், அதன்கீழ் 24, அதற்கு அடுத்து 48, அதன்கீழ் 64, கீழ் தட்டில் 108 என தீபங்கள் ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றுவதால் வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற்றம் காணலாம்.
மேலே சொன்ன ஐந்து வகை தீபங்களையும் வீட்டிற்குள் ஏற்றுவது சிறப்பு.
வீட்டின் மொட்டை மாடியில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றுவதற்கு ஆகாச தீபம் என்று பெயர். இதனை மறைந்த நம் முன்னோர்களுக்காக ஏற்றுவர். இந்த தீபத்தை ஏற்றினால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, பித்ருக்கள் தோஷம் நீங்கும். பெரியோர்களின் சாபமும் மறையும்.
தண்ணீரில் தீபங்களை மிதக்க விடுவதற்கு ஜலதீபம் என்று பெயர். இப்படி செய்தால் உடல்நோய்கள் குணம் ஆகும்.
கனமான அட்டைகளினாலோ, லேசான மரக்கட்டைகளினாலோ ஓடம் போல் தயாரித்து அதை தண்ணீரில் மிதக்க விட்டு அதில் அகல் விளக்குகளை ஏற்றுவது நவ்கா தீபம் என்று பெயர். இப்படி ஏற்றுவதால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மேலும் பிரயாணத்தில் விபத்து ஏதும் இன்றி திருப்தியாக செல்லலாம்.
கோவில் கோபுரங்களில் அகல்விளக்கு ஏற்றுவது கோபுர தீபம். இப்படி ஏற்றுவதால் கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் நோய்நொடி இன்றி வாழ்வர். கிராமங்& களில் தொற்று நோய் பரவி இருந்தால் அது குணமாகும்.
வீடு முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றி ஓளி வெள்ளமாக மாற்றுவது சர்வதீபம் என்று அழைக் கப்படுகிறது. இதில் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.