“ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்”; கமல் பேட்டி
1 min read“I will ask Rajini for support”; Interview with Kamal
1-/12/2020
ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் சந்தோஷ்பாபு. இவர் கமல்ஹாசன் முன்னிலையில் அவரது கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவரை கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்தார்.
ரஜினியிடம் ஆதரவு
இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தேர்தலின்போது ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா என்று கேட்டனர்.
அதற்கு அவர், “அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா?
ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும்.” என்றார்.