April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை

1 min read

The people of the Southern District do not come out; C.M Warning

1/12/2020

தென் மாவட்டங்களை புயல் தாக்க இருப்பதால் அங்குள்ள மக்கள் வெளியே வரவேண்டாம் என்று முதல்-அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புரெவி புயல்

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த புயல் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் புவியரசன் கூறியதாவது:-
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புரெவி புயலாக வலுப்பெற உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடக்கும். டிச.3ம் தேதி காலை தென்தமிழக கடல் பகுதியை நெருங்கும்.

மழை பெய்யும் இடங்கள்

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இன்று( செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யக்கூடும்.

நாளை(புதன்) மாலை அல்லது இரவில் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். இதனால் நாளை தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்லக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் எச்சரிக்கை

தமிழகத்தில் இதுவரை பெய்த வடகிழக்கு பருவமழையின் அளவு, பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:

  • புதிதாக புயல் உருவாவதையொட்டி போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம்.
  • டிசம்பர் 4 வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் தென்மாவட்ட மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க செல்ல வேண்டும்.
  • மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் (தென் மாவட்டங்கள்) மக்கள் வெளியே செல்ல வேண்டாம்.
  • அண்டை மாநில கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அந்தந்த மாநில கரையை அடைய வேண்டும்.
  • ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை நீர்படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மின்கம்பிகள், தெருவிளக்கு கம்பிகள், மின்மாற்றிகள் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம்.
  • கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்து, பசுந்தீவனங்களை போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மீட்பு படையினர் ஜேசிபி வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகளுடன் பாதிப்பு ஏற்படும் இடங்களில் முகாமிட வேண்டும்.
  • கூடுதலாக ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

பேரிடர் மீட்புக் குழு

  • கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் தலா 2 வீதம் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
    இவ்வாறு அவர் கூறினார்.

About Author

1 thought on “தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் ; முதல்வர் எச்சரிக்கை

  1. Excellent information. Very good news.appropriate action taken by the Tami Nadu Government. TN govt taken alll precautions like niver . People should co operate with govt.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.