June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

சமூகசேவையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு-ரஜினி திட்டம்

1 min read

Ticket-Rajini decides to contest elections for those involved in social service

7/12/2020

வருகிற சட்டசபைத் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட சமூக சேவகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

ரஜினி கட்சி

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி சட்டசபைத் தேர்த்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அவர் இதுபற்றிய செய்தியை அறிவித்த நாள் முதல் தீவிர ஆலோசனையில் உள்ளார். அவரது ஆலோசனையில் தமிழருவி மணியன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

முதலில் கட்சியின் பெயர் பற்றி ஆலோசித்தார். அந்தப் பெயர் தேசிய கட்சியை நினைவூட்டும் வகையில் அமையுமா? அல்லது மாநில அரசிலை நினைவூட்டும் வகையில் இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இதுபற்றி ரஜினி தீர்க்கமாக முடிவு எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கட்சியின் பெயரைக்கூட அவர் தேர்வு செய்துவிட்டாராம்.
அடுத்து தேர்தலில் போட்டியிட யாருக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் அவர் சிந்தித்து வருகிறார். தன்னலம் இன்றி உழைப்பவர்கள்தான் அரசியிலுக்கு வரவேண்டும் என்று விரும்புவார். அந்த வகையில் அவர் சமூகநல சேவையில் ஈடுபாடு கொண்டவர்களையே வேட்பாளராக நிறுத்துவார் என்று கூறப்படுகிறது. தனது மன்றத்துக்கு உறுப்பினர்களில் அதிக சேவை மனப்பாமை கொண்டவர்களுக்கும் கொடுப்பார். அதே நேரம் மன்றத்திற்கு தொடர்பு இல்லாத… தன்னலமற்ற சேவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டு உள்ளார்.

ரஜினியின் கட்சியுடன் கூட்டணி வைக்க சில கட்சிகள் ஆசைப்படுகின்றன. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. கண்டிப்பாக ரஜினி கட்சியுடன் கூட்டணி வைக்காது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது அனைத்துத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடலாமா என்றும் ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் தெரிகிறது.

பெங்களூரு பயணம்

இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென்று பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். அங்கும் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா ஊரடங்கில் போயஸ் கார்டன் வீட்டிலும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தார். 9 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் அவர் வெளியூர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படம் இன்னும் முடிவு பெயவில்லை. வருகிற 15-ந் தேதி ஐதராபாத்தில் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.